அடுத்தமாதம் 6ஆம் திகதி முதல் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
www.srilankacricket.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை, கொழும்பு 07 வித்யா மாவத்தை மற்றும் தம்புள்ளை கிரிக்கட் மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.
T20 போட்டி நாட்களில் தம்புள்ளை பிரதேச சபை அலுவலகத்திலும் டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளன.
ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் பல்லேகல மைதானத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகள் இடம்பெறும் தினங்களில் பலகொல்ல அபித மைதானத்திலும் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த டிக்கெட் கவுண்டர்கள் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் என்றும் வித்யா மாவத்தை டிக்கெட் கவுண்டர் அந்தந்த நாட்களில் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் என்றும் சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.