சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் இவ்வாரம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள ஐ.எம்.எப். பிரதிநிதிகள் நாளை நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு வழங்கப்படும் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிகளின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.
நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது ஆராயப்படும். நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ள அடுத்த கட்ட கடன் தவணை தொடர்பிலான தீர்மானமும் இதன்போது எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.