முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் இன்று மாலை விசேட பேச்சுவார்த்தையொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறவுள்ளது.
பதில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.