சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுக்களை நாட்டிற்கு எடுத்து வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து நாட்டிற்கு வர முயற்சித்த போது அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை கொண்டு வந்த உள்நாட்டில் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரிடமிருந்து ஜெலட்னம் வகையைச் சேர்ந்த 36800 சிகரெட்டுகள் அடங்கிய 184 காடன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.