இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு சீன பிரதமர் Li Qiang தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு நீண்டகால வரலாற்றைக் கொண்டதென சீன பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
67 வருடங்களுக்கு முன்னர் சீனாவிற்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின. அன்று முதல் இரு நாடுகளுக்கும் பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றி வருவதுடன் ஸ்திரமான உறவுகளை பேணி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழும் சீன- இலங்கை உறவுகளை வலுப்படுத்தவும் கட்டியெழுப்பவும் எதிர்பார்த்துள்ளதாக சீன பிரதமர் Li Qiang தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.