திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்கவின் உறவினர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் மறைந்திருப்பதாக தன்னை காண்பித்துக் கொண்டு அவர் உள்நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தன்னியக்க கைத்துப்பாக்கி மற்றும் 6 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.