வெளியாகியுள்ள க.பொ.த சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய முதல் 10 இடங்களில் ஒரு மாணவன் மாத்திரமே இடம்பிடித்துள்ளார். ஏனைய 9 பேரும் மாணவிகள் என்பது விசேட அம்சமாகும். மாத்தறை ராஹூல வித்தியாலயத்தைச் சேர்ந்த சகுண சதிஷான் எனும் மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்களில் இடம்பிடித்துள்ளார்.
பரீட்சைக்கு சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்ற சகுண, அதன் பின்னரும் பரீட்சையில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமை பாராட்டுக்குரியது.
உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு தான் விரும்புவதாக சகுண சதிஷான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளியான பெறுபேறுகளுக்கமைய அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஹிருணி மல்ஷா குமாரதுங்க பெற்றுள்ளர். இரண்டாம் இடத்தை இரு மாணவிகள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இதில் ஒருவரான குலுனி மெத்சலாய கொழும்பு 7 மியுசியல் கல்லூரியைச் சேர்ந்தவர். மற்றைய மாணவியான விமன்சா ஜயனதி ரத்னவீர குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்தவர். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 13,309 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.