ஐந்து விளையாட்டு மத்திய நிலையங்களை எந்தவொரு நிகழ்வுகளும் இன்றி மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பு, மாத்தளை, பிங்கிரிய மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மத்திய நிலையங்களை உடனடியாக மக்கள் பாவனைக்கு வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் பிரதானிகளுடன் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த நிலையங்களின் நிர்மாணப் பணிகள் கடந்த ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஹொக்கி விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், உள்ளரங்கு விளையாட்டு மைதானம் என்பன உள்ளடங்குகின்றன. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலை மாணவர்கள் தமது விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு குறித்த விளையாட்டு மத்திய நிலையங்களை பயன்படுத்தக்கூடிய சூழல் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே பிரதமரின் நோக்கமாகும்.