இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று நேற்று மாலை (28) வெலிமடை – பொரலந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் பின்புற சக்கரங்கள் இரண்டு சமநேரத்தில் அகன்று விலகிச் சென்றுள்ளன.
இதனால் பஸ்வண்டி பாரிய விபத்தில் சிக்கவிருந்த நிலையில், சாரதி உரிய நேரத்தில் பஸ்ஸை தரித்து நிறுத்தியதால் விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.
பஸ்ஸில் 20 பயணிகள் வரை இருந்த நிலையில், சமயோசிதமாக செயற்பட்டு பஸ்ஸை நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதியை பயணிகள் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.