பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கால்களை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் பங்கதெனிய மற்றும் குமாரக்கட்டுவை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் வேறொரு முறைப்பாட்டின் விசாரணைகளுக்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கால்களை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் .
சமூக ஊடகங்களில் தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் முறைபாடு செய்த பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர் .