போதைப்பொருள் கடத்தல்காரரான தனுஷ் புத்திக என்ற “அங்கொட ஜிலே”வின் பிரதான உதவியாளரை ஐஸ், கேரள கஞ்சாவுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அவரிடமிருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 51 கிராம் கேரள கஞ்சாவும் 2,74,400 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.