இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய 4ஆம் நாளில் Follow on முறையில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 360 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
முன்னதாக இலங்கை அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 602 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், நியூசிலாந்து அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 88 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்காக 515 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலையிலேயே தற்போது 360 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.
அதற்கமைய, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.