புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நேற்று (28) வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர் , யுக்திய நடவடிக்கையை அமுலாக்குவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மற்ற பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன் செயல்படுவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை காணப்படுகிறது. அந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாக குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.