பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு பெற்றோர்களிடமிருந்து நிதி சேகரிக்கக்கூடாதென நாட்டின் அனைத்து பாசடாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான சுற்றறிக்கையினை கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
உலக சிறுவர் தினம். ஆசிரியர் தினம் போன்ற கொண்டாட்டங்களின் போது பெற்றோர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனால் பெற்றோர்கள் பிள்ளைகள் உட்பட ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.