இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.
வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி உள்ள நிலையில் நேற்றை நாள் நிறைவின் போது 2 விக்கட் இழப்பிற்கு 22 ஓட்டங்களை பெற்றிருந்த நியுசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் ஊடாக டெஸ்ட் வரம் பெற்ற நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை பெற்றார். மிச்செல் செட்னர் அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் 602 ஓட்டங்களை பெற்றது.
இதற்கமைய 512 ஓட்டங்களால் நியுசிலாந்து அணி பின்னிலையிலுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இன்றைய போட்டி இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதன்போது நியுசிலாந்து 5 விக்கட்டை இழந்து 199 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக நியுசிலாந்து அணி 315 ஓட்டங்களை பெற வேண்டும்.