ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை காரணமாக பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்கு 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வ பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.