ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த பதவியிலிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன குறித்த பதவியிலிருந்து விலகியதையடுத்து பதவி வெற்றிடமானது. இதனையடுத்து இன்று சட்டத்தரணிகள் சங்கம் கூடிய நிலையில் அதன் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட தெரிவு செய்யப்பட்டார்.