இஸ்ரேல் இராணுவத்தினரின் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளார். பெலனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள குறித்த அமைப்பின் ஆயுத களஞ்சியத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர் விமானத் தாக்குதல்களை நடத்தியது.
இதில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளதாக அல் ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் தலைவர் உயிரிழந்து தகவல் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை. குறித்த தாக்குதல்களில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர்.