இலக்கிய மாதத்தை முன்னிட்டு 25வது முறையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகியுள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று கலந்துகொண்டார்.
அங்கு வந்திருந்த ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது. இம்முறை புத்தக கண்காட்சியில் 400 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு காட்சிக் கூடங்களும் அதில் உள்ளடங்குகின்றன. கண்காட்சியை பார்வையிட வருகை தந்த மக்களுடன் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நேற்றைய தினம் ஆரம்பமான இந்த கண்காட்சி ஒக்டோபர் மாதம் 6ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பார்வையிட முடியும்.