கொழும்பு – கண்டி வீதியில் யக்கலை நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ வீரர் செலுத்திச் சென்ற கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பஹா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். காரின் சாரதியான இராணுவ வீரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.