இந்தியாவின் கேரளாவில் மற்றொரு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து மாநிலத்துக்கு புதிதாக வரும் அனைவரும் மாநில சுகாதார நிறுவனத்தை அணுக வேண்டும் என்றும் நோய் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.