களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த வெல்கம, பின்னர் அதிலிருந்து விலகி நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானார். 2020 பொதுத் தேர்தலில், அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
குமார வெல்கம கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.