ஹெட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்டன் பிரிட்ஜ் விதுலிபுர சிங்கள வித்தியாலயத்திற்கு அண்மையில் காணப்படும் மண்மேடு சரிந்து விழும் அபாயத்திற்கு உட்பட்டுள்ளது.
இதனால் பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த மண்சரிவு அபாயம் நிலவுகிறது. பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பாடசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்மேடுகள் சரியும் அறிகுறிகள் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.