சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷ்பந்து தென்னகோன், குறித்த கடமைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் குறித்த பதவி வெற்றிடமாக இருந்தது.
பொலிஸ் திணைக்களத்தில் 36 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்ப்பட்டுள்ளார்.
வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் வழங்கல் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியான அவர் இலங்கை சட்டக் கல்லூரியின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். மனிதவள மேலாண்மையில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.