சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பிரியந்த குமார வெதமுல்ல இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். சர்வதேச உறவுகள் தொடர்பிலான விசேட நிபுணத்துவ கௌவர பட்டத்தை பெற்றுள்ள அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் விஞ்ஞான பிரிவில் முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.
பொருளியல் விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ துறையிலும் அவர் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பில் 3 பட்டப்படிப்பு டிப்ளோமாக்களை பூர்த்தி செய்துள்ள பிரியந்த குமார வெதமுல்ல பேராதணை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் தொடர்பிலான கலாநிதி பட்டத்தையும் பெறவுள்ளார்.
அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தொடர்பாடல், ஊடக கல்வி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பாடல், சர்வதேச சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட பாடங்களுக்கான சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.
இதற்கு மேலதிகமாக சந்தைப்படுத்தல் மூலோபாயா முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பில் ஆய்வுகள் பலவற்றையும் மேற்கொண்டுள்ளார்.
1996ம் ஆண்டு பல்கலைக்கழக வாழ்வில் ஊடக பயணத்தை ஆரம்பித்த அவர் அப்போது வெளிவந்த சிதிஜய, ராவல, லக்ஜன போன்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் விசேட எழுத்தாளர் சபையின் ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த சிங்கள மொழி பத்திரிகைகளின் ஆசிரியராக செயற்ப்பட்ட பிரியந்த குமார விசேட எழுத்தாளராகவும் செயற்ப்பட்டுள்ளார்.
கடந்த 2004ம் அண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இணைந்துகொண்ட அவர் 2007ம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.