சேருவில காவந்திஸ்ஸ முன்பள்ளி பாடசாலைக்குள் இன்று பிற்பகல் யானையொன்று நுழைந்ததில் அங்கு அமைதியின்மை ஏற்ப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வகுப்பறைக்குள் தடுத்துவைத்து யானையை அங்கிருந்து துரத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பாதுகாக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். சேருவில பகுதிக்கு நீர் அருந்துவதற்கான வந்த யானைக்கூட்டத்தைச் சேர்ந்த யானை ஒன்றே இவ்வாறு பாடசாலைக்குள் நுழைந்துள்ளது.
பாடசாலையின் பின்பக்க வழியாக யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காட்டு யானை அச்சம் தொடர்ந்தும் நிலவுகிறது. பாடசாலைக்கென மின் வேலி இருந்த போதிலும் அது சேதமடைந்துள்ளதால் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிரமமுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.