பங்களாதேஷ் கிரிக்கட்டின் நட்சத்திர வீரர் ஷகீப் அல் ஹசன் சர்வதேச டுவன்டி டுவன்டி போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த டுவன்டி டுவன்டி உலக கிண்ணம் தனது இறுதி சர்வதேச போட்டித் தொடர் என ஷகீப் அல் ஹசன் குறிப்பிட்டுள்ளார். 129 டுவன்டி டுவன்டி போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2551 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 149 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.