முன்னாள் அரசியல் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கென பணியிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து விலகி மீண்டும் சேவைக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகaள் அனைவரும் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கமைய பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.