இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,874 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, உள்ளிட்ட பிரதேசங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.