கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 13 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதம் கடை திறப்பு விழாவொன்றிற்கு சென்றிருந்த போது கிளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்த்ர வசந்த உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.