வட மாகாணத்திற்கான புதிய ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் இன்றைய தினம் ஆளுனர் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
சர்வமத வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வடக்கு மாகாணத்திற்கான ஆளுனர் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் வட மாகாணத்திற்கான ஆளுனராக அண்மையில் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டார்.
யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.