நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் தனது 5 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் கமிந்து மெண்டிஸ் 8ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையிலேயே மேற்படி ஐந்தாவது சதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
நேற்றைய தினம் அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து 50இற்கும் மேல் ஓட்டங்கள் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று படைத்த சாதனையையே அவர் முறியடித்தார்.
முன்னதாக சுனில் கவாஸ்கர், பசில் புட்சர், சயீட் அஹமட் மற்றும் பேர்ட் சட்கிளிப் ஆகியோர் தனது முதல் ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் அரைச் சதம் பெற்றிருந்தனர்.