டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசின் நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இது பள்ளிக்கல்வித் துறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. எனவே அதை தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவிக்காத நிலையில் அதுபற்றி முதலமைச்சர் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு டெல்லி சென்றதும் டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் தங்கினார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது