ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களும், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களும் இன்று(27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டனர்.