கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணப்பொதிகளை இரகசியமாக திறந்து உள்ளேயிருந்த பொருட்களை திருடிய விமான நிலையத்தின் பயணப்பொதிகள் சேமிப்பு பகுதியில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான குறித்த நபர்
கடந்த 23ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து UL-314 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் பயணப்பொதிகள் சேமிப்பு பகுதியில் ரகசியமாக நுழைந்து பொருட்களை எடுத்தமை அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கேமரா காட்சிகளை அவதானித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள், அவர் குறித்த தகவலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு வழங்கியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக பயணிகளிடமிருந்து பொருட்கள் காணாமல் போனதாக முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், அவர்களின் விசாரணையின் காரணமாக இந்த ஊழியரை கைது செய்ய முடிந்துள்ளது. .
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் குறித்த ஊழியரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்