அரச சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லையென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமானது.
பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், பொதுச் சேவைகள், அரச பொறிமுறைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என தெரிவித்தார்.
பொதுச் சேவைகள் பயனற்றவை என மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து மாற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.