அக்குரஸ்ஸ சியம்பலாகொட பிட்டபெத்தர வீதியின் போபகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேன் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. 28 வயதுடைய ஆசிரியையும் அவரது கணவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.