ஒன்மெக்ஸ் D.T சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து மோசடிக்கு உள்ளானவர்கள் தமது பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் வகையில் முறைப்பாட்டு மாதிரி பத்திரமொன்றை தயாரித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மோச நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான சம்பத் சதருவன் ஆகியோர் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களிடமுள்ள சொத்துக்களுடன் கூடிய பெருமதியான ஐந்து காணிகளின் உறுதிப்பத்திரங்கள் மற்றும் திட்ட வரைபுகளை குறித்த திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.