இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை இடையிலான நாகரீக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளிற்கும் இடையிலான பாரம்பரியமான நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.