ஜனாதிபதி ஊடக பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்.
மாணவர் செயற்பாட்டாளராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் சமூகத்தில் செயலாற்றிய நஜித் இந்திக்க பல அரச வைத்தியசாலைகளிலும் கடமையாற்றியுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.