ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சிற்கு மேலதிகமாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு, எரிசக்தி , விவசாயம், காணி , கால்நடை வளம், நீர்ப்பாசனம் , கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் உள்ளிட்ட அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரதமர் ஹரினி அமரசூரிய பிரதமர் பதவிக்கு மேலதிகமாக பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு நீதித்துறை, கல்வி மற்றும் தொழல்நுட்ப விஞ்ஞானம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுஇளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, வர்த்தக, வணிக , உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ளார்.
புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சு தேசிய ஐக்கிய மற்றும் சமூக பாதுகாப்பு, ஊடகத்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள், பொதுமக்கள் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுற்றாடல், வனவிலங்கு , வனவளங்கள் , நீர் வழங்கல் , பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி , வீடமைப்பு உள்ளிட்ட அமைச்சுக்களுக்கான அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி , பிமல் ரத்னாயக்க , வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் அமைச்சரவை நியமன நிகழ்வில் கலந்துகொண்டனர்.