இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் லெபனானில் பதற்றம் அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த இலங்கையர்கள் நால்வர் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் மேலும் இரு இலங்கையர்கள் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் பலர் லெபனானில் பணியாற்றுகின்றனர். ஹிஸ்புல்லாஹ் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று இரவு முதல் லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. தாக்குதல்களினால் அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.