பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. இதனால் மலைய ரயில் சேவைக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கிடையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.