இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்