கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று (23) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபட்ட பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.
இதன் போது அவர் செத்பிரித் பாராயணம் செய்து , ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்காக ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.
அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர் வரகாகொட ஶ்ரீ ஞானரதன தேரரை சந்தித்த ஆசி பெற்றார்.
இதன் போது அஸ்கிரி தரப்பு அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புதிய ஜனாதிபதிக்கு செத்பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்தவும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார்.