மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரீ சதர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு (22) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான மாளிகாவத்தையைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.