ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் அநுரவை பிரதான வேட்பாளராக கருதி இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய எங்கள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்