2024 ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ மற்றும் பா.அரிய நேத்திரன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.