இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளுக்கமைய எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்காத காரணத்தினால், முதல் இரு இடங்களில் இருக்கும் வேட்பாளர்களைத் தவிர்த்து ஏனையவர்களை போட்டியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
முதல் இரு வேட்பாளர்களில் வெற்றியாளரை தெரிவு செய்யும் வகையில் வேட்பாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்குகளை மாவட்ட ரீதியில் எண்ணும் பணிகள் இடம்பெற்று அதிலிருந்து கிடைக்கப்பெறும் பெறுபேறுகளுக்கமைய வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என தீர்மானிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.