ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது எந்தவொரு குழப்பத்திற்கும் இடமளிக்காது குறித்த செயற்பாடுகளை சரியாகவும், நேர்த்தியாகவும் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படுவார்கள் என தாம் நம்புவதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தாம் நம்புவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.